தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடானது உயரக்கூடும். அதே போல தென் மாநிலங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கும். இவ்வாறு காற்று மாசு ஏற்படாமல் இருப்பதற்கான சில வழிகளை நாம் பின்பற்றலாம்.

தீபாவளியின்பொழுது பட்டாசுகள் பயன்படுத்துவது ஒரு பொதுவான வழக்கம். எனவே தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இயற்கையில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம். வீட்டை பிளாஸ்டிக் பொருட்களால் அலங்கரிப்பதற்கு பதிலாக கரிம அல்லது மக்கும் பொருளால் அலங்கரிக்கலாம். பண்டிகை கொண்டாடத்தில் மிதமான அளவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்திக் கொண்டால் ஒலி மாசுபட்டை தவிர்க்கலாம்.