நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து சமீப காலமாக வீடியோ வெளியிட்டு வந்தார். விஜய்க்கு எதிராக சீமான் பேசும்போது விஜய் அண்ணா பத்தி அப்படி பேசாதீங்க. முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் ஓட்டைகளை சரி பண்ணுங்க என கூறி சீமானை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சீமான் சந்திக்க சென்ற போதும் விஜயலட்சுமி அவருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக தற்போது விஜயலட்சுமி சீமானுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னதான் சீமானும் நானும் அடித்துக்கொண்டாலும் அவர் என் கணவர். நான் அவரது முதல் மனைவி. அவரை மிரட்டி பணம் பறிக்க வேண்டிய கேவலமான சூழ்நிலையில் நான் கிடையாது. இப்போ நான் கேட்டாலும் சீமான் எனக்கு உதவி பண்ணுவாரு என விஜயலட்சுமி கூறியுள்ளார்.