மக்கள் பலர் எதிர்கால நிதி தேவையை சமாளிப்பதற்கு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் அனைத்து சேமிப்பு திட்டங்களுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது . இந்த புதிய விதியானது ஏப்ரல் 3 ஆம் தேதி அமலாகி இருக்கிறது. அதாவது சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் முதல் பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் வரை இந்த ஆவணத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இல்லை என்றால் கணக்குகள் மூடப்படும். இந்த புதிய விதியின்படி இந்த கணக்குகளில் தொடர்ந்து சலுகை பெற ஆதார் மற்றும் பான் அட்டை கட்டாய அடையாள சான்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை சிறுசேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் .அதேபோல பான் கார்டு 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் இருந்தால் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனவே ஆதார் மற்றும் பான் கார்டுகளை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.