
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக அறியப்பட்டவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து அமரன் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் “சிறப்பா செஞ்சிருக்கீங்க…. ரொம்ப எமோஷனலா இருக்குனு” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதாகவும் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு இந்த படத்தை காட்டுமாறு சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.