இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் வருடத்தில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் எனும் தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அவற்றில் இருசக்கர, 4 சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டிய நேரத்தையும், விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரத்தையும், ஆபத்தான நேரத்தையும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பிற்பகல் 3 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்தியாவிலுள்ள சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என போக்குவரத்துத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் பதிவான 4.12 லட்ச சாலை விபத்துகளில், 1.58 லட்சம் விபத்துக்கள் இந்த நேரத்தில் தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.