சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம் என சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் அதே மாடு பிடிபட்டால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் சென்னையில் 3,468 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.65.80 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.