இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள். அதோடு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து ராகுல் காந்தி கூறி வருகிறார். இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது என்றது‌. அதோடு ஜாதி வாரி  கணக்கெடுப்பு நடத்துவது என்பது மத்திய அரசின் வரைமுறைக்கு உட்பட்டது என்பதால் அரசின் செயல் முறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியது. மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.