மத்தியப் பிரதேச மாநிலம் போர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு யோகா செய்வதற்கு முன்பு ‘நமாஸ்’ (தொழுகை) செய்யுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் தற்காலிகப் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

தியோரி பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்தது. அங்கு 5ஆம் வகுப்பு மாணவர்கள், தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்றபோது, தங்கள் பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவித்ததன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆத்திரமடைந்த பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) சந்தோஷ் சிங் சோலங்கி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, ஆசிரியர் ‘சூர்ய நமஸ்காரம்’ செய்வதற்கு முன்பு நமாஸ் செய்யுமாறு தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை மாணவர்கள் செயல்விளக்கம் அளித்துக் காட்டினர்.

“>

 

மாணவர்களின் இந்த செயல்விளக்கத்தைத் தொடர்ந்து, சோலங்கி உடனடியாக அந்த ஆசிரியரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து, விசாரணைக்கு உத்தரவிட்டார்.  தற்போது, இச்சம்பவம் குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை உறுதியளித்துள்ளது.