இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 31ம் தேதிக்கு பின்னரும் நீட்டியது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.