2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் & ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. இந்த ஊதிய உயர்வு, 2022 நவ. 1ஆம் தேதி முதல், முன் தேதியிட்டு அமலாகும். இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஊதிய உயர்வால் வங்கிகளுக்கு ரூ.7,898 கோடி கூடுதலாக செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.