பயனர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக 18 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஓராண்டாக பிளே ஸ்டோரில் இருந்த ஏஏ கிரெடிட், ஈஸி கிரெடிட், ஈசி கேஷ் உள்ளிட்ட 18 ஆப்கள் பயனர்களின் செல்போன்களை உளவு பார்த்தது. இதனைத் தொடர்ந்து அந்த செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ள நிலையில் பயனர்கள் யாராவது இந்த செயலிகளை வைத்திருந்தால் உடனே நீக்குமாறு கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.