சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன்  ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. மொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் சந்திராயன் – 3 வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த கன்னட விரிவுரையாளர் மூர்த்தி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சந்திராயன் – 3 தோல்வியடையும் என்று பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து முன்னாள் கல்வித் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான சுரேஷ் குமார் தற்போதைய கல்வித்துறை அமைச்சர் மது பங்காருப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “நாடு முழுவதும் சந்திரயான் – 3 விண்கலம் ஏவப்பட்டதை கொண்டாடும் நிலையில் இந்த விரிவுரையாளர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் எப்படி மாணவர்களை ஊக்கப்படுத்துவார். விரிவுரையாளர் ஹுலிக்குண்டே மூர்த்தியிடம் உரிய விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.