சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா சிவராத்திரியான நாளை (பிப்ரவரி 18) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இரவில் தங்கி வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலி நடமாட்டம் இருப்பதால் இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலில் தங்கி வழிபட அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.