
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் போலீஸ் ஒருவர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் அம்ரோஹா பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் குமார் இவர் அப்பகுதியில் போலீசாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து சத்தமாக கேட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை சரி செய்ய வந்தபோது நரேஷ் குமார் தனது மொபைல் எண்ணை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கும் போலீஸான நரேஷ் குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அந்தப் பெண்ணின் கணவருக்கும் இது தெரிய வர, சந்தேகித்து அவர் அவர்களை பிடிக்க நினைத்து வெளியே செல்வது போல் சென்றுள்ளார் . பின் திரும்பி வந்து பார்க்கையில், தனது மனைவி காவலரோடு தவறாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சம்பந்தப்பட்ட நபரை பணியிட நீக்கம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.