தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட நிலையில், திமுக சார்பில் கணபதி  ராஜ்குமார்  வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 433 வாக்குகள் தற்போது வரை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் அண்ணாமலை 238 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.