பொதுவாகவே கோவிலுக்கு செல்லும்போது சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருக்கும் மணியை பலரும் அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக கோவில் மணியை அடிக்கிறோம் என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் கோவிலுக்கு சென்றால் மணி அடிக்க வேண்டும், இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோவில் மணி அடிப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் பொதுவாக கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் செய்யப்படுவது இல்லை. இது காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனிஸ் உள்ளிட்ட பல உலோகங்களால் ஆனது. கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்தும்.

இந்த ஒளியானது 7 வினாடிகள் வரை நீடித்த ஒலியை எழுப்பும். இந்த மணியிலிருந்து வரக்கூடிய ஒலியானது நம்முடைய உடலில் காணப்படும் ஏழு முக்கிய மையங்களில் தாக்கம் செலுத்தும். அதனால் நம்முடைய மூளையானது ஒருநிலைப்படுத்தப்படுகின்றது. அதே சமயம் கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசை மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கி மன அழுத்தத்தை குறைக்கும். மணி அடிப்பதால் நம் மனது அமைதி பெற்று நேர்மையான எண்ணங்களை சிந்திக்க செய்கின்றது. இதனால்தான் கோவிலுக்கு செல்பவர்கள் மணி அடிக்கின்றனர். இதுவே இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணமாகும்.