வங்கி கணக்கு விஷயத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விதிமுறைகளை மாற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இனி பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KYC என்பது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் ஒரு நடைமுறை. இந்த செயல்முறை மூலம் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அனைத்து தேவையான ஆவணங்களின் புகைப்பட நகல்களையும் KYC படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து நிறுவனங்கள், வங்கிகள், அரசு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் சேகரிக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த நபரை அடையாளம் காண முடியும்.