
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் ரேணுகா சுவாமி என்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் தன்னுடைய காதலி பவித்ரா கவுடாவுக்கு இணையதளத்தில் ரேணுகா சுவாமி ஆபாச மெசேஜ் அனுப்பிய நிலையில் அவரை கொடூரமாக கொண்டு உடலை கால்வாயில் வீசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் தர்ஷினின் மனைவி விஜயலட்சுமி தற்போது அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தர்ஷனை விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு தான் தர்ஷன் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் கடந்த 10 வருடங்களாக பவித்ரா கவுடாவுடன் அவர் கூடாத உறவு கொண்டிருந்த நிலையில் தன்னை கேலி செய்தவரை அவர் கொலை செய்யுமாறு கூற தர்ஷன் அவரை கொலை செய்தார். இதனால் மிகவும் மன வேதனையில் இருக்கும் விஜயலட்சுமி தர்ஷனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தன் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிய நிலையில், அவரை பாலோ செய்வதை நிறுத்திவிட்டு தர்ஷன் ரசிகர்கள் தன்னை பாலோ செய்வதையும் நிறுத்தினார். அதோடு கைதாகி சிறையில் இருக்கும் தர்ஷனை அவர் ஜாமினில் எடுக்கவும் முயற்சி செய்யவில்லை. மேலும் இதனால் விஜயலட்சுமி தர்ஷனை விவாகரத்து செய்வது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.