தமிழகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள 2250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களின் சேவையை கருதி அவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ பணியாளர்கள் நியமனங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பின் வழங்கப்படும் என்று அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான மருத்துவ பணியாளர் தேர்வில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.