
தமிழகத்தில் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே எப்போதுமே ஒரு வித கருத்து மோதல் என்பது நிலவுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்த நிலையில், நான் என்ன அவரைப் போன்று மோசடி வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்தேனா என்று அண்ணாமலை ஒருமுறை கூறியிருந்தார். இதேபோன்று செந்தில் பாலாஜியும் அடிக்கடி அண்ணாமலையை விமர்சிப்பார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஆயிரக்கணக்கான ஆடுகளை வெட்டி குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் பண்டிகை காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை மட்டும் வெட்டி கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம். எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளப்பட்டிக்கு உள்ளேயும் வர முடியாது. வெளியேயும் போக முடியாது. இதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஆடு என்று அண்ணாமலையை தான் செந்தில் பாலாஜி மறைமுகமாக விமர்சித்து தாக்கி பேசியதாக கூறப்படுகிறது