வடமேற்கு டெல்லியின் அசோக் விஹாரில் ஐந்து வயது சிறுமியை தாய் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்து போலீசார் அவரது தாய் உள்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அந்த சிறுமியின் தாய் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கணவன் கைவிட்டு சென்ற பிறகு ஐந்து வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. ராகுலை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ராகுலும் அவரது குடும்பமும் குழந்தையை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் திருமணத்திற்கு தடையாக இருந்த ஐந்து வயது மகளை அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.