இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீடுகளிலும் சிலிண்டர் இருக்கிறது. சிலிண்டர் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. இதில் சில நேரம் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துகளும் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்து ஏற்படும்போது  எரிவாயு நுகர்வோருக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்குகிறது. தற்செயலான எரிவாயு சிலிண்டர் வெடித்தால், விபத்து நடந்த உடனேயே அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் எல்பிஜி விநியோகஸ்தரிடம் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் சம்பவத்தை முழுமையாக விசாரித்து உறுதி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கும், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் விநியோகஸ்தர் தகவல் அளிப்பார். க்ளைம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.