இந்தியாவில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிஎப் தொகையாக செலுத்தி வருகின்றனர். அதன் பிறகு ஊழியரின் மருத்துவ அவசர நிலை, சொத்து வாங்குதல் மற்றும் திருமண செலவு என சிலவற்றுக்காக EPF தொகையைப் பாதையில் பெற்றுக் கொள்ள முடியும். வேலையில்லாமல் இருக்கும் சமயத்திலும் உங்களுடைய செலவுக்காக இந்த தொகையை நீங்கள் பெறலாம். தற்போது பிஎப் தொகையை எப்படி எளிதில் பெறுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

இதற்கு முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் உள்நுழைந்து UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்த பிறகு உங்களுக்கான பி எப் பணம் இரண்டு நாட்களுக்குள் வந்து சேரும்.