கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் இருக்கும் தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிகழ்வு கடன்களை திருப்பி செலுத்தி உறுப்பினர்கள் பயன்பெறும் விதமாக செயல்படுத்தப்பட்ட சிறப்பு கடன் தீர்வு திட்டம்-2023 சிறப்பு முகாம் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பலவகையான கடன்களை கொடுத்து வருகிறது.

கடன் தாரர்களின் வட்டி சுமையை குறைக்கவும் கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் இருக்கும் நிலுவையில் உள்ள தவணைத் தவறிய கடன்களை வசூல் செய்து இந்த நிறுவனங்களின் நிதி நிலையில் பலப்படுத்தும் விதமாக “சிறப்பு கடன் தீர்வு திட்டம்” முதல்வரின் அறிவுறுத்தலின்படி கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் பயனை கடன்தாரர்கள் முழுமையாக பெரும் நோக்கத்தில் 2.03.2024 அன்று அந்தந்த வங்கி சங்க வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் பயனை பெற 13.03.2024 க்குள் கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அரசின் சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.