
நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புரட்சித்தமிழர் கட்சி தொடங்கி கொடி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜன், சீமான் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கூட்டணி அமைக்கிறோம் என்பது வாக்குக்காக அல்ல.
தமிழ் தேசியம் பேசும் யாரும் தமிழ் மொழிக்காக தமிழருக்காக எந்த செயல்பாடும் செய்யவில்லை. ஒரு கூட்டணி குறித்து பேசினால் எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள் ? அதுதான் முதல் கேள்வியாக இருக்கும். எங்கள் கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும் ? எங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் ? என்பதுதான் அவர்களுக்கு கவலையே தவிர தமிழ் தேசிய சமுதாயம் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை.