உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கா அணிந்திருந்த பெண் குழந்தையுடன் ஒரு தெருவில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின் அருகே சென்று அவரை முத்தமிட்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசி சென்றார். அதிர்ச்சியில் அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார். பின்னர் அந்த நபரை திட்ட ஆரம்பித்ததும் அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மீரட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியின் முகம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.