பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு படையினர் அரியலூர் நகரில் இருக்கும் 17 உணவகங்கள் மற்றும் பேக்கரி கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். இந்நிலையில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணியிலும் அமர்த்த கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனை மீறி பணியில் அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, 6 மாத கால சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.