குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 400 ஏக்கர் நிலம் நவம்பருக்குள் ஒப்படைக்கப்படும். பின்பு கட்டுமான பணிகள் தொடங்கி 12 மாதத்திற்குள் முடிவடையும். அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.