தமிழகத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவில் சுமார் 2000 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்தோடு தென்காசி மாவட்டத்தில் மட்டும் 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் டிஎன்பிசி இதற்கான விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகு ஓஎம்ஆர் தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு முறைகேடுகள் என்று புகார் கொடுக்கப்பட்டால் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் தட்டச்சு பணிக்கான தேர்வின் முறைகேடு நடந்திருப்பது குறைவுதான் என்று விளக்கம் அளித்துள்ளது. ஒரே பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதால் முறைகேடு நடந்திருக்கும் என்று கூறுவது தவறு எதுவும் கூறியுள்ளது.