தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் விண்ணப்பம் சரி பார்க்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த விண்ணப்பத்தில் ஏதாவது பிழை அல்லது சந்தேகம் படும்படியாக இருந்தால் அதிகாரிகள் வீட்டுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பெரும்பாலான விண்ணப்பங்களில் மின்சார யூனிட் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படாததால் அதனை நிரப்புவதற்காகவும் ஆய்வாளர்கள் வீட்டிற்கு வந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் கல ஆய்வு பணிகள் மற்றும் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி அனைத்தையும் முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரு வேலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யவும் குடும்ப தலைவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அதற்கான பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.