தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் இது தொடர்பான அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது .

இந்த பட்ஜெட்டில் அறிக்கையை நிதி அமைச்சர் வாசிக்கும்போது தகுதி வாய்ந்த குடும்ப பதவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில், மீனவ பெண்கள், சிறுக்கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் கட்டிட பணியாளர்கள் என பலரும் பயனடையும் திட்டமாக அமையும் என விளக்கம் அளித்துள்ளார்.