
எனக்கு உதவி என்று எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள். அந்த பணத்தை வைத்து நான் மருத்துவமனையில் செலவு செய்து கொள்கின்றேன். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு மனதளவில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கையில் கூட பணம் தர வேண்டாம் ஒரு நல்ல மருத்துவமனையில் என்னை சேர்த்து இந்த நோயை மட்டும் குணப்படுத்தி தாருங்கள்.
இதைவிட பெரிய உதவி எனக்கு இருக்காது என் வாழ்க்கையில் என்றும் மறக்க மாட்டேன் என்று தான் இறப்பதற்கு முன்பு அவர் பேசியிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரிடம் நேர்காணல் மேற்கொண்ட தொகுப்பாளர் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று கேட்கையில்,
மருத்துவர் கூறிவிட்டார் குடி தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொன்னார். தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள். குடியை மறந்து விடுங்கள். இல்லையென்றால் என்னைப்போல் தான் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயாளும், மஞ்சள் காமாலை-யாலும் பாதிக்கப்பட்டு பிஜிலி ரமேஷ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இறப்பதற்கு முன் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயவு செஞ்சு குடியை விட்ருங்க😥#BijiliRamesh #Galatta pic.twitter.com/rUmFuoW4RW
— Galatta Media (@galattadotcom) August 27, 2024