
ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமா கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குடியிருப்பு நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும் பராமரிப்பு தொகை அளிக்க முடியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பாக புகார் ஒன்றையும் அளித்திருள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் பெண் வேடமிட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இது குறித்து போரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் விக்ரமன் மற்றும் அவருடைய மனைவி பிரீத்தி ஆகிய இருவரும் வக்கீல் முன்னிலையோடு காவல் நிலையத்திற்கு சென்று அவதூறாக இந்த வீடியோக்களை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்கள். இதனையடுத்து அவர்கள் அளித்த பேட்டியில் படப் பிடிப்பு சம்பந்தமக எடுக்கப்பட்ட வீடியோ வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த வீட்டில் நாங்கள் இல்லை. வேறு வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்த பிரச்சனையை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள். இதுற்குய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.