இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை தொடர்ந்து அரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகல விலை படியை உயர்த்தின.

இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு அனைத்து வகை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அகல விலைப்படி உயர்த்த முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கான ஊதியம் 2500 முதல் 3500 வரை உயர உள்ளது. இந்த உயர்த்தப்பட்டுள்ள அகல வேலை படி ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.