இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் எனவும் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பின் போது சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு போலி ஆதார் மற்றும் பேன் எண் போன்ற காரணங்களால் ஆதாருடன் தவறான பான் கார்டு எண் இணைக்கப்படுகின்றது. இதனை சரி செய்ய முதலில் ஆதாரம் மற்றும் பான் கார்டு எண்ணை delink செய்தால் போதும்