மதுரை அருகே உள்ள கீழடி அருங்காட்சியகம் இரண்டு ஏக்கர் பரப்பில் 18.43 கோடி செலவில் தமிழர் பெருமை பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகின்றது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாத ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் தினந்தோறும் பார்வையாளர்கள்,பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என தினம் தோறும் வருகை புரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகின்ற 14ஆம் தேதி முதல்வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறை விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார். அதோடு கீழடி அருங்காட்சியகத்திற்கு தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை விட அரசு ஆணையிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.