கேரளாவில் அவ்வப்போது ரேஷன் கடை பணியாளர்களுக்கு கிட் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்காக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் நிலுவை தொகை வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் ரேஷன் கார்டு விநியோகத்திற்கான கமிஷன் பாக்கி குறித்து ரேஷன் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலுவை தொகையை அரசு வழங்கினால் மட்டுமே கிறிஸ்துமஸ்க்கு தேவையான அரிசி, கோதுமை போன்றவற்றை முன் பணம் கொடுத்து வியாபாரிகளிடம் இருந்து வாங்க முடியும். இல்லையென்றால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரேஷன் கடை மூலமாக நீலம், வெள்ளை அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் மஞ்சள், இளஞ்சிவப்பு அட்டைதார்களுக்கு கோதுமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.