இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளம் செலவுக்கு போகாமல் இருப்பதால் மக்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பல வங்கிகள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன. ஆனால் யுட்டிலிட்டி கட்டணங்களுக்கு சில ரிவார்டு பாயிண்டுகளை வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தற்போது அகற்றி உள்ளன.

அதன்படி யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி யூடிலிட்டி பில்களுக்கு மொத்தம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தினால் ஒரு சதவீதம் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்து வசூல் செய்யப்படும். அதனைப் போலவே ஐ டி எப் சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி உங்களுடைய மொத்த யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள் 20000 ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி உடன் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.