ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது..

#ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும்.

#ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

#ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

#காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

#காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

#மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது.

#மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

#மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை.

# அதிகபட்சமாக அரங்கில் 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

#காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

#காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது.