கனடா நாட்டில் 2023 ஆம் வருடம் மருத்துவர்களுடைய கவனக் குறைவு காரணமாக சுமார் 175ஆயிரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயக்க மருந்து நிபுணரின் தவறுதல் காரணமாக வாழ்நாள் முழுவதும் முதுகுத்தண்டில் ஊசியோடு வாழும் நிலைமை பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பெண்ணுக்கு மருத்துவர் தவறுதலாக ஊசியை முதுகெலும்பில் குத்தி விட்டாரா? அது அவருக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது தவறு நடந்தும் அதை மறைத்து விட்டாரா? என்பது தெரியவில்லை.

சொல்லப்போனால் இது குறித்து அந்த பெண் புகார் அளித்தும் மருத்துவ அமைப்பு முறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. முதுகெலும்பில் ஊசி போட்ட போது இந்த தவறு நடந்திருக்கலாம் என்று அப்பெண் கூறுகிறார். ஆனால் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் ஆறு வருடங்களாக இந்த பதிலுக்காக அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.  அவருக்கு தொடர்ந்து முதுகு வலி ஏற்பட்ட நிலையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது அவருடைய முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் பெரிய துண்டு இருந்துள்ளது. இதுதான் அவருடைய தோல் மற்றும் கால் வலிக்கு காரணம் என்பதும் அவருக்கு பிறகு தெரியவந்துள்ளது.