உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் மருத்துவமனையின் தவறால் சிகிச்சையால் பாஜக பெண் தலைவி சுனிதா ஷுக்லா உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி பரப்ரபை ஏற்படுத்தியுள்ள்ளது. அதாவது கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவரை, குடும்பத்தினர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கும்போது, அவருக்கு ஒரு மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மருந்து செலுத்திய பிறகு, சுனிதாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்து உயிரிழந்தார்.

சுனிதாவின் மரணத்திற்கு காரணம் தவறான மருந்து எனக் குடும்பத்தினர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால்  மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மறைந்த பெண்ணின் மகள்கள் மருத்துவமனையின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க முயன்றபோது, அங்கு பணியாற்றும் சிலர் அவர்களை தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. சுனிதாவின் மகள் ரிச்சா ஷுக்லா, “மருத்துவமனையினர் என் அம்மாவை எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் அனுபவமற்ற ஊழியர்களிடம் ஒப்படைத்து பரிசோதனை செய்தனர். பிறகு உடலை எங்களிடம் ஒப்படைத்து, பல்ஸ் சரியாக இருக்கிறது என்று பொய் கூறினர்” என கூறியுள்ளார்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக கான்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு பெண் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. சுனிதாவின் உடல்நிலை பிற்பகல் 3.30 மணியளவில் மோசமடைந்ததால், அவரை அர்ஷியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ரெஜென்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுதான் உண்மை, மோதல் அல்லது தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளனர்.