தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் பொதுமக்கள் நம்பியிருந்த முக்கிய அறிவிப்புகளான கல்வி கடன் ரத்து, எரிவாயு மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவை பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மானிய கோரிக்கை விவாதத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இவ்வாறு கேள்வி எழுப்பும் என்று புரிந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் இந்த பட்ஜெட் கூட்டத்திலேயே சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.