தமிழகத்தில் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பான முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எந்தெந்த நாட்கள் எந்த விவாதம் நடைபெற உள்ளது என்பதற்கான பட்டியல் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற மார்ச் 29ஆம் தேதி புதன்கிழமை நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை சார்பாக விவாதம் மற்றும் உள்துறை, மதுவிலக்கு, ஆய தீர்வைத் துறை மற்றும் போக்குவரத்து துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்.

இதனை தொடர்ந்து மார்ச் 30ம் தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை தொடர்பான விவாதம் நடைபெறும். ஆர்ச் முப்பத்தி ஒன்றாம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெறும். ஏப்ரல் ஒன்றாம் தேதி நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.