கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான முறையில் பதில்களை வழங்கும். இந்த இணையதளத்தில் கொட்டி கிடக்கும் பல வகையான தகவல்களை சேகரித்து மனிதர்கள் போல அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குகின்றது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ChatGPT, Github Copilot, Blackbox மற்றும் பிற AI கருவிகளை மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூருவில் உள்ள ஆர்வி பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், மாணவர்கள் கல்வி நோக்கங்களுக்காக சாட் போட்டை பயன்படுத்துவதை தடுப்பதற்காக முதற்கட்டமாக மாணவர்கள் ChatGPT மற்றும் பிற AI கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவர்கள் தங்களின் அசைன்மென்ட்டை AI கருவிகளின் உதவி இல்லாமல் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.