ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(40). இவர் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி(33) தனியார் கல்லூரியில் கணினி ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் நாகலட்சுமிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மணிகண்டன்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இதனை அறிந்த லட்சுமணன் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு நேற்றிரவு வழக்கம் போல இறால் பண்ணைக்கு சென்றார். உடனே நாகலட்சுமி மணிகண்டனை செல்போன் மூலம் அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

7 வயது மகன் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதே அறையில் நாகலட்சுமி மணிகண்டனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை ஜன்னல் வழியை பார்த்து கோபமடைந்த லட்சுமணன் கதவை பூட்டிவிட்டு போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.