அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்  நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன.  இந்த படம் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடி இருந்ததால் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்கப்பட்டது. இதுவரை 150 கோடிக்கு  படம் வசூல் செய்துள்ளது.  இந்த படம் குறித்து பலரும் பாராட்டி வந்த நிலையில் ரஜினிகாந்த் டிராகன் பட குழுவினரை வீட்டுக்கே அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் டிராகன் பட குழுவினர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ள பதிவில், “கலக்குறீங்க Bro.. விஜய் சார் என்னிடம் இப்படி சொன்னபோது நான் எப்படி உணர்ந்திருப்பேன் என உங்களால் புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்”