தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் கமல்ஹாசன். இவர் தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக கூறிய நிலையில் இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் கண்டிப்பாக தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் கமல்ஹாசன் நான் பேசியதில் தவறில்லை அதனால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் தக்லைப் பட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் தக்லைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என அமைச்சர் கூறி இருந்த நிலையில் தற்போது அங்குள்ள பேனர்கள் கிழக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.