கேரளாவில் சமீபத்தில் மாமல்லபுரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து கிட்டத்தட்ட 22 பேர் விபத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் வேறு எங்கும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட செல்லும் படங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு படகில் 150 பயணிகள் மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி, படகில் செல்லும் போது பயணிகள் யாரும் நின்று கொண்டு செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும், சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக லைஃப் ஜாக்கெட்டை முறையாக அணிந்த பிறகு தான் படகில் பயணம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அனைத்து மொழிகளிலும் அவர்களுக்கு புரியும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.