கத்தாரில் 8 முன்னால் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த வழக்குக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் எட்டு பேரையும் விடுதலை செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார்.