தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இலவச பயணத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தினால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், MLA டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பதிவில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டணமில்லா பேருந்து மாதிரி ஒன்றை சிறப்பு பரிசாக வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.